Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை

மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை

மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை

மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை

ADDED : அக் 15, 2025 01:39 AM


Google News
மொரப்பூர், மொரப்பூர் உதவும் கரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ரகுநாதன், அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் ஆகியோர், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சரவணனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் கடந்த, 1861ல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலன் கருதி மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மொரப்பூர்-அப்பியம்பட்டி சாலையில், உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு, பைப்லைன் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us