/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 26, 2025 02:09 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஸ்டாலின்குமார், பச்சியப்பன், ஜாகீர்உசேன் ஆகியோர் தலைமை வகித்து, காத்திருப்பு போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கை குறித்து பேசினர்.
இதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது, தீர்வு காண போதிய கால அவகாசம் அரசு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அனைத்து நிலை ஊழியர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள அனைத்து நிலை காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி நெருக்கடி கொடுத்தும், கால அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயித்து பணியாற்றக்கோரி, உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதே போல், அரூர் தாலுகா அலுவலக வளாகத்திலும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திலும், பென்னாகரம் தாலுகா அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.