/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி: தர்மபுரி விவசாயிகள் வேதனைமுள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி: தர்மபுரி விவசாயிகள் வேதனை
முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி: தர்மபுரி விவசாயிகள் வேதனை
முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி: தர்மபுரி விவசாயிகள் வேதனை
முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி: தர்மபுரி விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 11, 2024 12:43 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில்பெரும்பாலான விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் முள்ளங்கி, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
முள்ளங்கி, 40 நாளில் அறுவடைக்கு வருகிறது. ஒரு ஏக்கர் முள்ளங்கி சாகுபடி செய்ய, 35,000 ரூபாய் செலவாகிறது. ஒரே நேரத்தில், விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளதால் விளைச்சல்அதிகரித்து விலை குறைந்துள்ளது.
நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ, 5 முதல், 6 ரூபாய்க்கு விற்பனையாவதால், வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ முள்ளங்கி, 15 முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.