/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 'அட்மிட்' அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 'அட்மிட்'
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 'அட்மிட்'
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 'அட்மிட்'
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 'அட்மிட்'
ADDED : அக் 09, 2025 10:04 PM
பாலக்கோடு:அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தர்மபு ரி மாவட்டம், பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டனர்.
மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். இதில், 10 மாணவர்கள், 8 மாணவியருக்கு இரவு, 9:00 மணிக்கு மேல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை, பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில், 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களை, பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து, பள்ளி சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆசிரியர்களிடம், மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


