Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
அரூர்: அரூர் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பநாயக்கன்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சித்தேரி, சிட்லிங், மொரப்பூர், கொங்கவேம்பு, பட்டுக்கோணாம்பட்டி ஆகிய பஞ்.,களில் வசிக்கும் பொதுமக்-களை அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது இலவச வீட்டுமனைப்-பட்டா, தார்ச்சாலை வசதி, தையல் இயந்திரம், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர வாகனம், செயற்கை கால் ஆகி-யவை வேண்டி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை நேற்று தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் வழங்கிய சம்-பத்குமார் எம்.எல்.ஏ., அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us