/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : செப் 13, 2025 01:08 AM
தர்மபுரி, தாயின் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அரசு பள்ளியில் நடந்தது.
தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் மிஷன் இயற்கை சார்பாக, பள்ளி தலைமையாசிரியர் சின்னசித்தன் முன்னிலையில் மரக்கன்றுகளை மாணவ மாணவியர் நட்டு வைத்தனர்.
இதில், பங்கேற்ற வட்டார வள மைய பயிற்றுனர் பத்மாஸ்ரீ மாணவ, மாணவியரை பாராட்டி, நடப்பட்ட மரகன்றுகளுக்கு மாணவர்களின் தாயின் பெயரை சூட்டினார். அதனை தொடர்ந்து, மரக்கன்று நட்டு வைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் வெங்டேஷன் நன்றி கூறினார்.