/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சித்தப்பாவை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை சித்தப்பாவை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை
சித்தப்பாவை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை
சித்தப்பாவை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை
சித்தப்பாவை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : அக் 24, 2025 12:55 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபால், 58, முன்னாள் ராணுவ வீரர்; இவருக்கும், இவரது அண்ணன் மகன்களான சேகர், 36, ஸ்ரீதர், 32, ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
கடந்த, 2016ல் தனபாலை, சேகர், ஸ்ரீதர் ஆகிய இருவரும் இரும்பு ராடால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த தனபால், அரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குப்
பதிந்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால், சேகர், ஸ்ரீதர் ஆகிய இருவருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும், தலா, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா
தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜரானார்.


