/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல் ரூ.5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 04, 2025 07:19 AM
தர்மபுரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. இதில், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வழங்கி பேசுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு திட்டத்தின் மூலம், 19,267 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில், 5,01,732 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 4,500 புதிய மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்,'' என்றார்.
இதில் டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். அனைத்து வணிகர்கள் சங்க பொறுப்பாளர் உமாபதி முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வயதில் மூத்த மாற்றுத்திறனாளிகளுக்கும், ஊத்தங்கரை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, தொடக்கப்பள்ளி, பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் புத்தாடைகள், பரிசுகள், நிதியுதவி வழங்கப்பட்டன. ஊத்தங்கரை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்களும் சலுகைகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


