ADDED : ஜூலை 17, 2024 12:24 AM

ஆயக்குடி : திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பிரஜ்னா 2024 திட்டத்தை அறிமுகப்படுத்திய விழாவில் தமிழக அளவில் நடந்த ஓவிய போட்டியில் பழநி ஆயக்குடி பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவி சால்வியா முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம்,ரூ. 5000 ரொக்க பரிசு, சான்றிதழ் பெற்றார். வினாடி வினா போட்டியில் பிளஸ் 2 மாணவி மிருதுலவர்ஷினி, மாணவர் இளமாறன் முதல் பரிசு ரூ. பத்தாயிரம், தங்கப்பதக்கங்களை பெற்றனர்.
கட்டுரை போட்டியில் 10ம் வகுப்பு மாணவி கவிஸ்ரீ இரண்டாம் இடம், பேச்சுப் போட்டியில் 11ம் வகுப்பு மாணவி சிவகுருபிரியா மூன்றாவது இடம் பெற்றனர்.பட்டிமன்ற போட்டியில் சிவகுருபிரியா, மிருதுலவர்ஷினி நான்காம் பரிசை பெற்றனர். இவர்களை பள்ளி சேர்மன் வேலுச்சாமி, செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், குப்புசாமி, ராஜேந்திரன், மூர்த்தி, மவுன குருசாமி, சண்முகம், பள்ளி முதல்வர் மீனா குமாரி பாராட்டினர்.