/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புகைபிடித்தவர்களுக்கு 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம் புகைபிடித்தவர்களுக்கு 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம்
புகைபிடித்தவர்களுக்கு 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம்
புகைபிடித்தவர்களுக்கு 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம்
புகைபிடித்தவர்களுக்கு 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம்

ரோட்டோரங்களில் குப்பை தேங்கி உள்ளதே ...
திண்டுக்கல் நகரில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் முறையாக துாய்மை பணிகள் நடந்து வருகிறது. ரோட்டோரங்களில் பொது மக்கள் குப்பை கொட்டாமல் தடுக்கும் வகையில் குப்பை கொட்டும் இடங்களை சுத்தப்படுத்தி அங்கே கோலம் வரைந்து சுகாதார பிரிவு அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தினமும் 2 முறை துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்கின்றனர்.
புகையிலை பயன்பாடுகள் தாராளமாக உள்ளதே...
புகையிலை பயன்பாடுகளை தடுக்க உணவு பாதுகாப்பு துறையோடு இணைந்து அடிக்கடி ஆய்வு செய்து புகையிலை விற்கும் கடைகளை கண்டு பிடிக்கிறோம். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தவதோடு அபராதமும் விதிக்கிறோம். தொடர்ந்து புகையிலை விற்பனையை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கை தடுக்க என்ன செய்கிறீர்கள்...
பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடையே அதிகளவில் பரவி வருகிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்ற முடியும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளோடு இணைந்து வாரத்திற்கு 2 நாட்கள் நகர் முழுவதும் பிளாஸ்டிக் ரெய்டில் ஈடுபடுகிறோம். சிக்கும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிப்பதோடு பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. 2024ல் 6 மாதத்தில் 150 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தான் மிகவும் கொடுமையானது. மக்களும் இதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்படை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிதான் என்ன...
நகரில் வாரத்திற்கு 3 நாட்கள் தெருநாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பிரிவு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் நகரில் சுற்றித்திரியும் 7000 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையளித்து தெரு நாய்கள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும். இதுவரை 300 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதா...
மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இருந்தபோதிலும் பல பகுதிகளில் சுத்தப்படுத்த காலதாமதம் ஏற்படுகிறது. துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
பொது இடங்களில் புகை பிடிப்பதும் ஜோராக நடக்கிறதே ...
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை தடுக்க திண்டுக்கல் மாநகராட்சியில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக புகை பிடிக்கும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர். அந்த வகையில் 6 மாதத்தில் ரூ.18,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
கொசு ஒழிப்பு எந்த நிலையில் உள்ளது ...
மழைக்காலங்களில் ரோட்டோரங்கள்,வீடுகளில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகுவதை கண்டறிந்து கிருமிநாசினி மருந்து தெளிக்கிறோம். இதற்கென 50க்கு மேலான கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 48 வார்டுகளிலும் அடிக்கடி கொசு மருந்து தெளிக்கிறோம்.
டெங்கு விழிப்புணர்வு எந்த நிலையில் உள்ளது ...
ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்களை எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் அமைத்து அதிலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது றுஎப்படி என விளக்கம் கொடுக்கிறோம். திண்டுக்கல் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா...
மாநகராட்சி கட்டுப்பாட்டில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இதோடு மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக மக்களை தேடி சென்று உடல் நலத்தை பரிசோதனை செய்கின்றனர். டெங்கு,மலேரியா உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே வீடுகளுக்கே டாக்டர்கள் நேரடியாக சென்று சிகிச்சை வழங்குகிறோம் என்றார்.