/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் விழாவில் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து கோயில் விழாவில் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து
கோயில் விழாவில் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து
கோயில் விழாவில் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து
கோயில் விழாவில் ஆண்கள் பங்கேற்ற கறி விருந்து
ADDED : ஜூலை 12, 2024 08:00 AM
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி அருகே ராஜாபுரம் வடக்கு தெரு தலைவாசல் கருப்பணசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து நடந்தது.
பழநி நெய்க்காரப்பட்டி அருகே ராஜபுரம் வடக்கு தெருவில் தலைவாசல் கருப்பணசுவாமி கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆனித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜூலை இரண்டாம் தேதி திருவிழா சாட்டப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடு வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். விழாவில் வெட்டப்பட்ட ஆடுகளை இரவோடு இரவாக சமைத்து அதிகாலைக்குள் விருந்து வைத்து சாப்பிட்டனர். மீதமான உணவுகளை கோயில் வளாகத்தில் குழிதோண்டி கொட்டினர்.