/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம் ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ஆக்கிரமிப்பு, சமூக விரோத செயல்கள் கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்

சேதத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்
வி. எஸ். கோவிந்தன், நகராட்சி முன்னாள் தலைவர்: வார்டில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது. தெருவில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது இதனருகே உள்ள அரசு நிலமும் புதர்மண்டி உள்ளன.
சாக்கடை பள்ளத்தால் விபத்து
பாலசுப்ரமணி, வணிகர் சங்க நகர பொருளாளர்: சந்தையில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளதால் இங்கு வருகை தருவோர் அவதிப்படுகின்றனர்.
எரியாத தெருவிளக்குகள்
தமிழ் செல்வி, கூலித்தொழிலாளி: தாங்கள் வசிக்கும் பகுதியில் கழிப்பறை வசதியின்றி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் அவலமும், காந்திபுரம் செல்ல வேண்டியதுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு இன்றி பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் எரியாத நிலை உள்ளது. சாக்கடை வசதியின்றி கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
அப்பாஸ், கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் ரூ.14 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கொண்டித் தொழுவம் வருவாய்த்துறை வசம் உள்ளதால் தாசில்தார் மனு அளிக்கப்பட்டு சீரமைக்கப்படும்.