ADDED : ஜூன் 27, 2024 04:21 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மனநலம் பிரிவில் சர்வதேச போதை ஒழிப்பு தினம் நடந்தது.
டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். போதை தடுப்பு டி.எஸ்.பி.,பெனாசிர் பாத்திமா,மனநல மருத்துவர் துறைத்தலைவர் உமாதேவி, மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி, மருத்துவ அதிகாரி சந்தான குமார், மருத்துவ அலுவலர்கள் செந்தில் குமரன்,செந்தில்குமார்,இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் லலித் குமார் பேசினர்.
சீலப்பாடியில் திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி., உதயகுமார் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ.,ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.