Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாற்றுத்திறனாளி தர்ணா 197 பேர் முறையீடு

மாற்றுத்திறனாளி தர்ணா 197 பேர் முறையீடு

மாற்றுத்திறனாளி தர்ணா 197 பேர் முறையீடு

மாற்றுத்திறனாளி தர்ணா 197 பேர் முறையீடு

ADDED : ஆக 06, 2024 04:59 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் பல்வேறு குறைகளுடன் மனுக்கள் வாயிலாக 197 பேர் முறையிட்டனர்.

கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 197 மனுக்கள் பெறப்பட்டன. இதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., க்கள் சக்திவேல், சரவணன், சிவராம், வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன் கலந்து கொண்டனர்.

நத்தம் குப்பாண்டி கவுண்டன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் 44, மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில்,' காதல் திருமணம் செய்து கொண்ட உறவினர் ஒருவருக்கு ஆதரவு கொடுத்ததற்காக எங்கள் குடும்பத்தினரை சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். சொத்துகளை அபகரிப்பதற்காக தாக்கி மிரட்டல் விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அஜாய்கோஷ் கொடுத்த மனுவில், பழங்குடியினருக்கான சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் போது நிலக்கோட்டை தாலுகா என்.புதுப்பட்டியில் வசிக்கும் பழங்குடியினரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us