/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு; தர்ணா ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு; தர்ணா
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு; தர்ணா
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு; தர்ணா
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு; தர்ணா
ADDED : ஜூலை 24, 2024 05:41 AM
ஆயக்குடி : ஆயக்குடிபேரூராட்சி 16 வது வார்டில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்க கோரி பேரூராட்சி அலுவலக 'கேட்'டை பூட்டி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த வார்டில் முறையாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களை புறக்கணிப்பதாக கூறி வி.சி.க.,வை சேர்ந்த வாஞ்சிநாதன் தலைமையில் மக்கள் அலுவலகம் முன்பு திரண்டனர். அலுவலக வாயில் 'கேட்'டை பூட்டு போட்டு பூட்டினார். தொடர்ந்து அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கேட் திறக்க, பேரூராட்சி நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கு பின் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.