Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை

ADDED : ஜூன் 27, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
பழநி : கூட்டம் அதிகம் இருந்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள், புதர் மண்டிய மயானம், தெருவிளக்குள் இன்றி இருள் என பழநி ஒன்றியத்திற்குட்பட்ட கரடி கூட்டம் ஊராட்சி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.

கரடி கூட்டம், அக்கமநாயக்கன்புதுார், இந்திரா நகர், கிருஷ்ணாபுரம் பகுதிகளை உள்ளடக்கிய கரடி கூட்டம் ஊராட்சியில் பழநி கோவை முக்கிய சாலையான கொழுமம் சாலை உள்ளது. இந்தசாலை சேதத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. சில இடங்களில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. குடிநீர் விநியோகம் முறையாக நடந்து வரும் நிலையில் குடிநீர் வசதியை மேம்படுத்தவும் கோரிக்கை எழந்துள்ளது.

தெரு விளக்குகள் இல்லை


சக்திவேல், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர், அக்கமநாயக்கன்புதுார்: தெரு விளக்குகள் போதுமானதாக இல்லை . சில இடங்களில் பொருத்தப்படாமல் உள்ளது.

குப்பை அள்ளும் பணிகள் முறையாக நடைபெற்றாலும் ஊராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லை.

அரசு பஸ்களில் இலவசம் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டம் அதிகம் இருந்தால் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை இதனால் சிரமம் ஏற்படுகிறது.

எந்த வசதியும் இல்லை


பிரகாஷ், தனியார் நிறுவன ஊழியர், அக்கம நாயக்கன்புதுார்: அக்கமநாயக்கன்புதுாரில் உள்ள சுடுகாட்டில் எந்த வசதியும் இல்லை. எரியூட்டு மேடை சேதமடைந்துள்ளது.

சுடுகாடு புதர்மண்டி உள்ளது. சாலை வசதி இருந்தாலும் தெரு விளக்குகள் இல்லை. தண்ணீர் வசதியும் இல்லை.

போதுமான இடவசதி இல்லை


ஜெகன், தனியார் நிறுவன ஊழியர், கரடி கூட்டம்: குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். சுடுகாடு விரிவாக்கம் செய்யப்படாததால் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் அடக்கம் செய்யும் நிலையில் உள்ளோம். விரைவில் சுடுகாடு விரிவாக்கம் செய்து தர வேண்டும்.

சாலைகள் அமைப்பு


நரேந்திர பிரசாத், ஊராட்சி துணைத் தலைவர்: சுகாதாரப் பணிகள், குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலத்தடி தண்ணீர் தொட்டிகள் 30,000 லிட்டர் அளவில் அமைக்கப்பட உள்ளது. வீடுகள் அனைத்தும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்க திட்டமிடப்படுகிறது. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேம்படுத்த நடவடிக்கை


ராஜ்மோகன்,ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சண்முக நதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

அக்கமநாயக்கன்புதுார், கரடி கூட்டம், இந்திரா நகர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சுகாதாரமான ஊராட்சியாக உருவாக்க உள்ளோம். அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடை .மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கரடி கூட்டம் அக்கமநாயக்கன்புதுார் பகுதிகளில் சுடுகாடுகளை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ரூ.4.கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொழும்பும் சாலையில் விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us