/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு
துார்வாராத சாக்கடைகள்... சீரமைக்கப்படாத பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு

எலித்தொல்லை
சுந்தரேசன்,தொழிலாளி: சவுராஷ்டிரா காலனி பகுதியில் சாக்கடை ஆண்டுக்கணக்கில் துார்வாராமல் இருப்பதால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்குகிறது. மழை பெய்தால் அவ்வளவு தான் மழைநீரோடு சேர்ந்து கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து மக்களுக்கு தொற்று நோயை பரப்புகிறது. அதிகாரிகளுக்கு இதுகுறித்து பல புகார்கள் கொடுத்துள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுத்தாபடில்லை. மக்கள் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும். எலித்தொல்லைகள் அதிகளவில் உள்ளது.
கழிவுநீர் தேங்குகிறது
செந்தில்நாதன், கடை உரிமையாளர் : தெருக்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. தொடர்ந்து இதேநிலை நீடிப்பதால் கொசுக்கள் அதிகளவில் பரவியுள்ளது. கொசு மருந்து பல மாதங்களாக அடிக்காமல் இருப்பதால் சொல்லவே முடியாத அளவிற்கு கொசுக்கள் தொல்லை உள்ளது. மக்களும் வீட்டில் இருந்தபடி வேதனைப்படுகின்றனர். வாரத்திற்கு இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
ரோடை சீரமைக்க வேண்டும்
ரமணன், தொழிலாளி : வார்டில் பல பகுதிகளில் ரோடுகள் சேதமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். அதிகாரிகளும் இந்த வழியாக தான் செல்கிறார்கள். பிறகு ஏன் சரி செய்யாமல் இருக்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வழியில் செல்லும் வாகனங்களும் பழுதாகின்றன. பாதிக்கப்படும் மக்களுக்காக சேதமான ரோடுகளை சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் எங்கள் பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்: நகருக்குள் பல இடங்களில் புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சேதமான ரோடுகளை கண்டறிந்து அதுவும் சீரமைக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.5 கோடியில் பூ மார்க்கெட் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட உள்ளது என்றார்.