/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கும் நாய் தொல்லை; சாலை வசதி அறவே இல்லை; பழநி நகராட்சி 29 வது வார்டில் தொடரும் அவதி எங்கும் நாய் தொல்லை; சாலை வசதி அறவே இல்லை; பழநி நகராட்சி 29 வது வார்டில் தொடரும் அவதி
எங்கும் நாய் தொல்லை; சாலை வசதி அறவே இல்லை; பழநி நகராட்சி 29 வது வார்டில் தொடரும் அவதி
எங்கும் நாய் தொல்லை; சாலை வசதி அறவே இல்லை; பழநி நகராட்சி 29 வது வார்டில் தொடரும் அவதி
எங்கும் நாய் தொல்லை; சாலை வசதி அறவே இல்லை; பழநி நகராட்சி 29 வது வார்டில் தொடரும் அவதி

துரத்துவதால் விபத்து
குமரேசன், தனியார் ஊழியர், சிங்கப்பெருமாள் சந்து, : இப்பகுதியில் ஆண்டவர் பூங்கா ரோட்டில் மழைக்காலங்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. வார்டு முழுவதும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.
குழந்தைகளுக்கு சிரமம்
மகேந்திரன், சாலையோர வியாபாரி, சுபதேவ் வீதி : சுபதேவ் வீதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஜிகா முழுமையாக செயல்படவில்லை. பழைய பைப் லைனில் தண்ணீர் வருகிறது. பாரதி நகர் சாலையில் வார்டு மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர்.
தேவை போலீஸ் ரோந்து
நாட்ராயசுவாமி, ஓய்வு மில் தொழிலாளி, சிங்கப்பெருமாள் கோனார் சந்து : எங்கள் பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். சாலைகள் குறுகலாக உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை அகற்றப்பட வேண்டும். சமூக விரோத செயல்களை கண்காணிக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
கழிவுநீர் தேக்கத்தை தடுக்க பாலங்கள்
ஆறுமுகம்,கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : வார்டில் தண்ணீர் வசதி சாலை வசதி சரியாக உள்ளது. குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். நாய் தொல்லை குறித்து நகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.