/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கர்ப்பிணியை ஏற்றாத டிரைவர் சஸ்பெண்ட் கர்ப்பிணியை ஏற்றாத டிரைவர் சஸ்பெண்ட்
கர்ப்பிணியை ஏற்றாத டிரைவர் சஸ்பெண்ட்
கர்ப்பிணியை ஏற்றாத டிரைவர் சஸ்பெண்ட்
கர்ப்பிணியை ஏற்றாத டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 15, 2024 02:07 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரிலிருந்து கல்வார்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு ஜூன் 12 அரசு பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் வேடசந்துார் கிளையில் பணிபுரியும் காசிராஜன் ஓட்டினார். இரவு கர்ப்பிணி ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து ஏற முயன்ற போது டிரைவர் ஏற்றாமல் சென்றார். இதே போல் இலவசமாக பயணிப்பதால் பஸ் ஸ்டாப்பில் நின்ற பெண்களை ஏற்றாமலும் சென்றார்.
இதை கண்டித்து ஜூன் 13 காலை சிங்கிலிக்காம்பட்டியில் அரசு பஸ்சை அப்பகுதி மக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் டிரைவர் காசிராஜனிடம் விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்தனர்.