/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தருமத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தருமத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தருமத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தருமத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தருமத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 15, 2024 06:41 AM

கன்னிவாடி : தர்மத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து போடம்பட்டி செல்லும் ரோட்டில் தனியார் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்தது. இது தொடர்பாக தனியார் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இவற்றை அகற்ற உத்தரவிட்டிருந்தது. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. பல ஆண்டுகளுக்கு முந்தைய ஊராட்சி நிர்வாகத்தின் டிவி அறை, தனியார் வணிக நிறுவன கட்டடங்கள் திண்டுக்கல் மேற்கு தாலுகா துணை தாசில்தார் சுரேஷ்குமார், ஆர்.ஐ., ராதிகா, வி.ஏ.ஓ., தாமரைக்கண்ணன் முன்னிலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ரெட்டியார்சத்திரம் துணை பி.டி.ஓ., ரத்தினபாண்டியன், ஊராட்சி தலைவர் மருதுமுத்து, செயலர் இன்னாசி உடன் இருந்தனர்.
குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் சிலும்பா கவுண்டனுார் பிரிவு அருகே புறம்போக்கு நிலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 28 சென்ட் இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை அகற்ற முறையாகநோட்டீஸ் அனுப்பப்பட்டது. இடத்தை காலி செய்யாத நிலையில் தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். வாக்குவாதத்திற்கு பின்பு ஆக்கிரமிப்பாளர்களே ஆக்கிரமிப்புகளை மண்அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றினார்.