/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா
20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா
20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா
20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா
ADDED : ஜூன் 14, 2024 07:16 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த மத நல்லிணக்க மீன்பிடி திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
தாமரைப்பாடியில் அமைந்துள்ளது பெரிய மந்தைகுளம். இக் குளத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மத நல்லிணக்க மீன்பிடித் திருவிழா நடந்தது.
இதையொட்டி குளம் கரையில் கன்னிமார் தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம், இஸ்லாமியர்கள் பாத்தியா ஓத, அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனையுடன் ஏராளமானோர் பங்கேற்றனர். அரை கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஜிலேபி, கட்லா, விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனர்.