Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புனித செபஸ்தியர் சர்ச்சில் கொடியேற்றம்

புனித செபஸ்தியர் சர்ச்சில் கொடியேற்றம்

புனித செபஸ்தியர் சர்ச்சில் கொடியேற்றம்

புனித செபஸ்தியர் சர்ச்சில் கொடியேற்றம்

ADDED : ஆக 05, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலையிலேயே செபஸ்தியார் திருவுருவம் பொறித்த கொடி முத்தழகுப் பட்டியில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சர்ச் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் அங்கு அமைக்கப்பட்டிருந்த 60 அடி கொடிக்கம்பத்தில் பாடல்கள் ஒலிக்க கொடி ஏற்றப்பட்டது.

அப்போது சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக புறாக்கள் பறக்கவிட்டப்பட்டது. ஆக.6ல் ஆடம்பர கூட்டுத் திருவிழா, திருப்பலியும் அன்று மாலையில் முக்கிய நிகழ்வான சமபந்தி அன்னதான நிகழ்வும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us