ADDED : ஜூலை 12, 2024 08:03 AM
ஒட்டன்சத்திரம்: நுாறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக துவக்கி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள சம்பளம் ரூ.319 ஐ முழுமையாக வழங்கிட வேண்டும்.
தி.மு.க., அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதி படி 150 நாட்கள் வேலையும் சம்பளத்தில் இருந்து ரூ. 100 உயர்த்தியும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, ஒன்றிய பொருளாளர் முருகேஸ்வரி பேசினர்.