/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர் பவனி மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர் பவனி
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர் பவனி
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர் பவனி
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர் பவனி
ADDED : ஜூலை 26, 2024 12:23 AM

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் திருவிழா தேர் பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் திருவிழா ஜூலை 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18- முதல் 22- வரை தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. ஜூலை 23 ல் சந்தியாகப்பரின் உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு கபாலமாலை சப்பரபவனி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் பவனி நடந்தது. இதையொட்டி அன்றைய தினம் காலை புதுநன்மை திருப்பலி, இரவு தேர்பவனி நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில்
வேத போதகர் சொரூபத்தை மந்திரித்து ஆசீர்வதிக்க திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதன் பின் வாணவேடிக்கையுடன் 5 புனிதர்களின் தேர்பவனி தொடங்கியது. மங்கமனுாத்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் பவனியாக வந்தது. விழாவின் நிறைவாக நேற்று காலை தேர் திருப்பலி , கொடியிறக்கம் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மங்கமனுாத்து திருத்தல பாதிரியார் தாமஸ் ஜான்பீட்டர் , பங்கு மக்கள் செய்திருந்தனர்.