/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மருநுாத்து மாரியம்மன் கோயில் திருவிழா மருநுாத்து மாரியம்மன் கோயில் திருவிழா
மருநுாத்து மாரியம்மன் கோயில் திருவிழா
மருநுாத்து மாரியம்மன் கோயில் திருவிழா
மருநுாத்து மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED : ஜூலை 15, 2024 05:02 AM

கோபால்பட்டி, ; கோபால்பட்டி மருநுாத்து மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி ஜூலை12 ல் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல்,அன்று இரவு சுவாமி கரகம் ஜோடிக்க புறப்படுதலுடன் திருவிழா தொடங்கியது.
மறுநாள் அதிகாலை மேளதாளம் முழங்க சாமி கோயில் வந்தடைதல், அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினி சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர்.
தொடர்ந்து இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மாலை அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன், பக்தர்கள் ஆரவாரத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.