ADDED : ஜூன் 26, 2024 06:57 AM
திண்டுக்கல் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலர் பிரதீப் பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் பொன்னர், மாநில துணைப்பொதுச்செயலர் விஜயகுமார், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலர் சின்னமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., அரசு, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.