/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம் பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்

அணைநீரை கொண்டு வாங்க
பழனிமுத்து, விவசாயி: குளம் நிரம்பினால் ஒன்றரை ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. விவசாயமும் செழித்து ஓங்கும். பரப்பலாறு அணை தண்ணீர் பெருமாள் குளம் வந்து அது நிரம்பி மறுநாள் செல்லும்போதுதான் குளத்திற்கு நீர் கிடைக்கிறது. பல ஆண்டுகள் பெருமாள் குளம் நிரம்புவதே இல்லை. அந்தக் காலங்களில் இந்த குளம் வறண்டே காணப்படும். அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
வரத்து கால்வாயை சீரமையுங்க
ஆர்.பழனிச்சாமி, விவசாயி: பெருமாள்குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழி பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்தி தர வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்டால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் இல்லாமல் குளம் தற்போது வறண்டு காணப்படுகிறது. குளத்திற்கு நீர்வரத்தை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளக்கரையை பலப்படுத்துங்க
எம்.வேலுச்சாமி, விவசாயி: குளத்தில் உள்ள செடிகளை அகற்றி குளக்கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் உள்ள செடிகளையும் அகற்ற வேண்டும். பரப்பலாறு அணை தண்ணீரை தனி வாய்க்கால் மூலம் இங்கு கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் சிறந்து விளங்கும்.