/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துாண் பாறையில் அத்துமீறிய வியாபாரிகளுக்கு அபராதம் துாண் பாறையில் அத்துமீறிய வியாபாரிகளுக்கு அபராதம்
துாண் பாறையில் அத்துமீறிய வியாபாரிகளுக்கு அபராதம்
துாண் பாறையில் அத்துமீறிய வியாபாரிகளுக்கு அபராதம்
துாண் பாறையில் அத்துமீறிய வியாபாரிகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 12, 2024 08:05 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் வன சரணாலய பகுதியான துாண்பாறையில் அத்துமீறிய வியாபாரிகள் 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
துாண் பாறை செபாஸ்தியர் சர்ச்சில் நேற்று முன்தினம் அனுமதியின்றி வழிபாடு செய்த வியாபாரிகள் விறகு மூலம் தீ மூட்டி சமைத்து உணவு பரிமாறினர்.
அவ்வழியே வந்த டி எப். ஒ., யோகேஷ் குமார் மீனா எச்சரித்தார். இதில் வியாபாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டி.எப்.ஓ., உணவு, பாத்திரங்கள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை காலால் எட்டி உதைத்து வியாபாரிகள் சிலரை தாக்கியதாக புகார் எழுந்தது. இப்பிரச்னை சம்பந்தமாக வியாபாரிகள் போலீசில் புகார் அளித்தனர். வனத்துறை, வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்னை அரசியல் ரீதியாக சென்றது.
வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர். வனத்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்த இருந்த நிலையில் உதவி வன பாதுகாவலர் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு ஏற்பட்டது.
இதனிடையே வனப்பகுதியில் தீ மூட்டி உணவு சமைத்தது, அனுமதியின்றி வழிபாடு என்பன உள்ளிட்ட அத்துமீறல் தொடர்பாக வியாபாரிகள் சையது ஜெரீப் 53, கணேஷ் பிரபு 44, ஆல்வின் ஹிம் 34, சித்திக் 48, பிரபு 27, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து டி.எப்.ஓ.. உத்தரவிட்டார். உறுதி அளிக்க வியாபாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
டி.எப்.ஒ., யோகேஷ் குமார் மீனா : வியாபாரிகள் சிலர் முறையான அனுமதி பெறாது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ மூட்டி சமைத்தது தவறாகும்.
இப்பிரச்னை சுமூகமாக கையாளப்பட்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வனத்துறை எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.