/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் விபத்து அபாயம் நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததால் விபத்து அபாயம்

தேவை ரோந்து பணி
எஸ்.எம்.கே.சேக் ஒலி, வர்த்தகர்கள் சங்கத் தலைவர், நத்தம்:வாகன ஓட்டிகளுக்கு பயண நேரமும் துாரமும் குறைவாகும் என்ற அடிப்படையில் மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட நான்கு வழிச்சாலையில் மின் கம்பங்கள் இருந்தும் பயன்பாட்டில் இல்லாததால் ,கனரக வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மின் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் .இதோடு போலீஸ் ரோந்து பணியையும் ஏற்படுத்த வேண்டும் .
தொடர் விபத்துக்கள்
ஏ.அப்துல் காதர் அம்பலம், தொழிலதிபர்,நத்தம்:இந்த சாலையில்தான் தமிழகத்திலே அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடி உள்ளது. நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பல இடங்களில் மின்விளக்குகள் எரியாமல் இரவில் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. இதனால் தொடர் விபத்துக்கள் நடப்பதையும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை கருதி உடனடியாக மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருள் சூழ்ந்த சாலை
ஆர்.எப்.சி.ராஜ்கபூர், வட்டார காங்கிரஸ் தலைவர், கோபால்பட்டி:நத்தம் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்து பல மாதங்கள் ஆகியும் சேர்வீடு பிரிவு பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. நான்கு சாலை சந்திக்கும் அந்த பகுதியில் மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வராததால் இதுவரை நடந்த விபத்துகளில் எனக்குத் தெரிந்து மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுங்க வரி வசூல் செய்யும் நிறுவனம் உடனடியாக சேர்வீடு பிரிவு பகுதியில் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.