ADDED : ஜூன் 27, 2024 05:10 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக், சரவணக்குமார், முருகன்,வசந்தன்,கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கு ரதவீதியில் ஆய்வில் ஈடுபட்டனர்.
நேமாராம்45, கடையில் 200 கிலோ தடை பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5000 அபராதம் விதித்தனர். 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 7 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.