/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நம்பர் பிளேட், லைசென்ஸ் இல்லா வாகனங்கள் பறிமுதல் நம்பர் பிளேட், லைசென்ஸ் இல்லா வாகனங்கள் பறிமுதல்
நம்பர் பிளேட், லைசென்ஸ் இல்லா வாகனங்கள் பறிமுதல்
நம்பர் பிளேட், லைசென்ஸ் இல்லா வாகனங்கள் பறிமுதல்
நம்பர் பிளேட், லைசென்ஸ் இல்லா வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 28, 2024 12:24 AM
திண்டுக்கல்: நம்பர் பிளேட் இல்லாத டூவீலர் ,அதிவேகமாக சென்றது,18 வயதிற்குட்டபட்ட சிறார்கள் டூவீலர் ஓட்டியது என திண்டுக்கல் போக்குவரத்து போலீசார் 7 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் உத்தரவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி,எஸ்.ஐ.,திலீப் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,நாகல் நகர் ரவுண்டானா பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் டூவீலரை ஓட்டியது, டூவீலர்களை வேகமாக ஓட்டியது,லைசென்ஸ் இல்லாத சிறார்கள் என 12 பேர் போலீசிடம் சிக்கினர்.
போலீசார் அவர்களிடமிருந்து 7 டூவீலர்களை பறிமுதல் செய்து ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர். சிக்கிய வாலிபர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.