ADDED : ஜூன் 14, 2024 07:22 AM
திண்டுக்கல்: என்.எச்.ஐ.எஸ்., திட்டத்தில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருவூலம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் ஜான் வில்சன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் முருகன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சிவக்குமார் பேசினர். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.