/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமி
வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமி
வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமி
வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமி
ADDED : ஜூலை 26, 2024 12:26 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயிலில் காலை முதல் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது.பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
-சாணார்பட்டி : கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
வாராகி அறக்கட்டளை தலைவரும் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் பூஜையை நடத்தினார். யாக பூஜையில் வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். அன்னதானம் நடந்தது.
சின்னாளபட்டி : தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடை தண்டினி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.
சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.