/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள் தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்
தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்
தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்
தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்

அச்சத்துடன் நடமாடும் சூழல்
வேல்முருகன், அபிஷேக ஸ்டோர், நடேசர் சன்னதி தெரு : பெரியநாயகி அம்மன் கோயில் அருகில் நடேசன் சன்னதி தெரு உள்ளது. இதன் தெரு பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. சாலையை முழுவதும் அகற்றி புதியதாக சாலை அமைக்க வேண்டும். தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
நடந்து வர சிரமம்
பிச்சைமுத்து, பொரிகடலை கடை, மாரியம்மன் கோயில் சந்து : அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஜிகா பைப் லைன் திட்டம் நகராட்சி சார்பில் கொண்டுவரப்பட்டது. ஆனால் எங்கள் பகுதியில் மெயின் பைப் சேதமடைந்துள்ளது .
கொசுத்தொல்லை தாங்கல
கணேசன்,அர்ச்சகர், தெற்கு ரத வீதி : பழநியில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் நான்கு ரத வீதியிலே அதிக அளவில் நடைபெறுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் இவ்வழியே அதிக அளவில் கடந்து செல்வர். தேர் நிற்கும் இடத்தில் சாக்கடை, சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடையை துார்வார வேண்டும். கொசு தொல்லை அதிகம் உள்ளது. நாய் தொல்லை மிக அதிகம். சாலைகளில் மாடு, குதிரை அதிகம் திரிவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
ஒரு தலை பட்சமாக அதிகாரிகள்
புஷ்பலதா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : நாய் தொல்லை அதிகம் உள்ளது. தெரு விளக்கு குடிநீர் வழங்கல் எந்தவித தடங்கல் இன்றி செயல்பட்டு வருகிறது. சாலை , சந்துகளில் பாதைகள் சேதமடைந்துள்ளது. சாலைகள் அமைப்பது குறித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.