ADDED : ஜூன் 28, 2024 01:20 AM
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான பசு, காளை மாடுகள் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில் மருத்துவர்கள் ராஜ்குமார், சபரிஅருள், சுரேஷ்குமார் ஆகியோர் 175 மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்தினர்.