ADDED : ஜூலை 26, 2024 12:30 AM

திண்டுக்கல் : அரசு கருவூலம் மூலம் ஊதியம்,ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு நகராட்சி,மாநகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மாநில தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை இதுபோன்ற நுாதன போராட்டங்கள் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.