/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீதிமன்றங்களில் 1300 வழக்குகளுக்கு தீர்வு நீதிமன்றங்களில் 1300 வழக்குகளுக்கு தீர்வு
நீதிமன்றங்களில் 1300 வழக்குகளுக்கு தீர்வு
நீதிமன்றங்களில் 1300 வழக்குகளுக்கு தீர்வு
நீதிமன்றங்களில் 1300 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 03, 2025 07:16 AM
திண்டுக்கல்: நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய ,மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை அனைத்து நீதிமன்றங்களிலும் சிறப்பு அமர்வின்பேரில் விசாரித்து முடித்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் படி திருட்டு, அடிதடி, போலீஸ் வழக்குகள், போராட்டம், தேர்தல் விதிமீறல், மது விற்பனை, விபத்து, சூதாட்டம், திருமணம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு தண்டனை வழங்கக்கூடிய நிலுவை வழக்குகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் ஆக.25ல் துவங்கி நவ.27 வரை நடந்த சிறப்பு அமர்வுகளின் விசாரணையில் 1300 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.


