/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஒரே நாளில் 6 வீடுகளில் 5 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளைஒரே நாளில் 6 வீடுகளில் 5 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை
ஒரே நாளில் 6 வீடுகளில் 5 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை
ஒரே நாளில் 6 வீடுகளில் 5 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை
ஒரே நாளில் 6 வீடுகளில் 5 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை
ADDED : ஜன 28, 2024 05:24 AM
ஒட்டன்சத்திரம்,; ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட நல்லாகவுண்டர் நகரில் பூட்டியிருந்த ஆறு வீடுகளில் ஒரே நாளில் 5 பவுன் நகை, ரூ. 1 லட்சம் கொள்ளை போனது.
ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் தங்கராஜ் 32. இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.தங்கராஜ் வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கோள்ளையடித்து சென்றார். ஆசிரியை சாந்தகுமாரி வீட்டிலும் ஒரு பவுன் நகை கொள்ளை போனது. மேலும் அருண்குமார், ராஜாராம், தங்கவேல், சீத்தாராமன் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்சென்று விட்டனர். இவர்களின் வீடுகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை போனது . வெளியூர் சென்றவர்கள் திரும்பி வந்த பின்பு தான் கொள்ளை போனது எவ்வளவு என்பது தெரிய வரும். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.