ADDED : ஜூன் 22, 2025 12:30 AM
திண்டுக்கல்:கோயம்புத்தூர் -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா, குட்கா, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸூக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் எஸ்.ஐ., மணிகண்டன், ராஜா சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்குகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசிடம் ஒப்படைத்தனர்.