/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் கிலோ தக்காளி ரூ.10 ஒட்டன்சத்திரத்தில் கிலோ தக்காளி ரூ.10
ஒட்டன்சத்திரத்தில் கிலோ தக்காளி ரூ.10
ஒட்டன்சத்திரத்தில் கிலோ தக்காளி ரூ.10
ஒட்டன்சத்திரத்தில் கிலோ தக்காளி ரூ.10
ADDED : செப் 16, 2025 04:43 AM
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.16 வரை விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், சாலைப் புதுார், காளாஞ்சிபட்டி, பாவாயூர், கல்லுப்பட்டி, கேதையுறும்பு, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கப்பலப்பட்டி சுற்றிய பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
தற்போது பல இடங்களில் அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டுக்கு வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தக்காளி விலை சரிந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ தக்காளி ரூ.30க்கு மேல் விற்பனையான நிலையில் நேற்று கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.16 க்கு விற்பனையானது. வரத்து அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் கூறினர்.