/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி
நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி
நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி
நாய்கள் தொல்லையால் தொடரும் விபத்து; பழநி 12வது வார்டில் வாகன ஓட்டிகள் அவதி

நோய் தொற்று அபாயம்
வேலுச்சாமி, சாலையோர வியாபாரி, ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடுவே நாய்கள் ஓடி திரிவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நோயுடன் நாய்கள் சுற்றி திரிவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. குழந்தைகள் முதியவர்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயரமான சாக்கடை
ஈஸ்வரி,குடும்பத் தலைவி, ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் சாக்கடை உயரமாக உள்ளது. பல இடங்களில் சாக்கடை குழிகள் திறந்த நிலையில் உள்ளன. அதற்கான மூடிகள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மழை காலம் வருவதற்குள் இங்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டால் சாக்கடை நீர் வீட்டிற்குள் புகுவதை தடுக்கலாம். கால்நடைகள் ரோட்டில் திரிவதை தடுக்க வேண்டும்.
கொசுத்தொல்லையும் அதிகரிப்பு
விஜய பிரபாகரன்,கறிக்கடை உரிமையாளர், ராஜாஜி ரோடு : எங்கள் பகுதியில் சாலையோர மர கிளைகள் வீட்டின் மேல் பகுதியில் படர்ந்துள்ளது. இதில் உள்ள புழுக்கள் பூச்சிகள் வீட்டின் உள் விழுகின்றன இதனால் தோல் அலர்ஜி நோய் தொற்று உள்ளிட்டவை ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகள் காரணமாக கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக சிரமம் ஏற்படுகிறது.
மரக்கிளை அகற்றப்படும்
முருகேசன், கவுன்சிலர், (வி.சி.க.,) : இந்திரா நகரை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் முறையாக இயங்குகிறது. சாக்கடைகளில் வரும் மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுத்துள்ளோம்.