/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கலாமே! படிக்கட்டு பயணங்கள் தவிர்க்க இதுவே தீர்வுபள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கலாமே! படிக்கட்டு பயணங்கள் தவிர்க்க இதுவே தீர்வு
பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கலாமே! படிக்கட்டு பயணங்கள் தவிர்க்க இதுவே தீர்வு
பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கலாமே! படிக்கட்டு பயணங்கள் தவிர்க்க இதுவே தீர்வு
பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கலாமே! படிக்கட்டு பயணங்கள் தவிர்க்க இதுவே தீர்வு
ADDED : ஜூன் 26, 2024 06:59 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகமாக உள்ளது. இலவச சைக்கிள், லேப்டாப், மருத்துவ கல்லுாரியில் சேர இட ஒதுக்கீடு உட்பட பல சலுகைகள் தொடர்வதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மேலும் அரசு டவுன்பஸ்களில் பயணிக்க கட்டணம் இல்லை என்பதால் பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
பள்ளி முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் பஸ்களில் செல்ல முற்படுவதால் படிக்கட்டு பயணம் தொடர்கதையாக உள்ளது.
பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. மாணவர்களோ சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பயணம் பல நேரங்களில் விபத்தில் முடிகிறது. படிகளில் நின்று பயணிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுவது அவசியம்.
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தாலே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இதோடு மாணவர்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களை கண்டறிந்து கூடுதல் பஸ்களை இயக்கவும் அக்கறை காட்ட வேண்டும்.