/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அம்மன் சிலை ஊர்வலம் தொடரும் நிர்வாகிகள் கைது அம்மன் சிலை ஊர்வலம் தொடரும் நிர்வாகிகள் கைது
அம்மன் சிலை ஊர்வலம் தொடரும் நிர்வாகிகள் கைது
அம்மன் சிலை ஊர்வலம் தொடரும் நிர்வாகிகள் கைது
அம்மன் சிலை ஊர்வலம் தொடரும் நிர்வாகிகள் கைது
ADDED : மார் 21, 2025 02:28 AM
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் பக்தர்கள் பாதுகாப்பு குழு சார்பில் மார்ச் 7ல் அபிராமி அம்மன் சிலையை வைத்து வழிபாடு, ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். போலீசார் அனுமதி மறுத்தனர். அம்மனை தரிசிக்க வந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், 65 பேரை அன்று இரவே விடுவித்தனர்.
ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் உட்பட ஐந்து பேரை சிறையில் அடைத்தனர். 10 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் தற்போது ஜாமின் பெற்றுள்ளனர். இந்நிலையில், மேலும் இருவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.