ADDED : பிப் 02, 2024 12:31 AM
சாணார்பட்டி: ராஜாக்கப்பட்டி கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தீத்தான் மனைவி பேச்சியம்மாள் 65.
நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. நேற்று காலை தோட்டத்து கிணற்றில் பேச்சியம்மாள் இறந்து கிடந்தார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


