/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி முருகன் கோயிலுக்கு மேலும் ஒரு பேட்டரி பஸ் பழநி முருகன் கோயிலுக்கு மேலும் ஒரு பேட்டரி பஸ்
பழநி முருகன் கோயிலுக்கு மேலும் ஒரு பேட்டரி பஸ்
பழநி முருகன் கோயிலுக்கு மேலும் ஒரு பேட்டரி பஸ்
பழநி முருகன் கோயிலுக்கு மேலும் ஒரு பேட்டரி பஸ்
ADDED : செப் 24, 2025 06:01 AM
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக மேலும் ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவீதி வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன். சுற்றுலா பேருந்து நிலையம் செல்ல இலவசமாக பேட்டரி கார், பஸ் 2024 மார்ச் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி பஸ் என 37 மின் வாகனங்களை கோயில் நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்நிலையில் கரூர் வைசியா பேங்க் சார்பில் 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்சை கோயில் இணைக்கமிஷனர் மாரிமுத்துவிடம் திருச்சி மண்டல உதவி பொது மேலாளர் விஷ்ணுகுமார்,கரூர் மண்டல உதவி பொது மேலாளர் விஜி குமார் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து 38 மின் வாகனங்கள் இயக்கப்படுகிறது.