/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல் உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்
உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்
உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்
உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்
ADDED : செப் 24, 2025 06:08 AM
பழநி, : பழநி ஜவஹர் நகர் பகுதியில் தடை புகையிலை பொருட்களை ஆய்வு செய்ய சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் , உதவியாளரை கடை உரிமையாளர் தாக்கினார்.
பழநி ஜவஹர் நகர் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே மளிகை கடையில் தடை குட்கா ,புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.
தொப்பம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் 43, உதவியாளர் கருப்புசாமி 26, ஆகியோர் மளிகை கடையை ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது கடை உரிமையாளர் ராஜவடிவேல் 56, அவரது மனைவி தமிழரசி 52, இருவரும் உணவு பாதுகாப்பு அலுவலர், ஊழியரை தாக்கினர்.
போலீசார் ஆய்வில் கடையிலிருந்த ஒரு கிலோ தடை புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடைக்கு சீல் வைத்து ரூ. 50,000 அபராதம் விதித்தனர். பழநி டவுன் போலீசார் ராஜவாடிவேல், தமிழரசியை கைது செய்தனர்.