ADDED : ஜன 28, 2024 05:25 AM

ஒட்டன்சத்திரம் ; ஒட்டன்சத்திரத்தில் டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலியானார். மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நின்றிருந்த கார் மீது மோதியதில் கார் கவிழ்ந்தது.
ஒட்டன்சத்திரம் அருகே மூனுாரைச் சேர்ந்தவர் சந்திரன் 32. ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரிசி கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 3:00 மணிக்கு ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். எதிரே வந்த அரசு பஸ் மோதி பலியானார்.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரம் நின்ற காரில் மோதியதில் கார் கவிழ்ந்தது. காருக்குள் யாரும் இல்லை. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.