/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துணை மருத்துவப்படிப்புகளுக்கு அழைப்பு துணை மருத்துவப்படிப்புகளுக்கு அழைப்பு
துணை மருத்துவப்படிப்புகளுக்கு அழைப்பு
துணை மருத்துவப்படிப்புகளுக்கு அழைப்பு
துணை மருத்துவப்படிப்புகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 20, 2025 03:39 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர், டையாலிசிஸ் டெக்னீசியன், மயக்கமருந்து தொழில்நுட்ப வல்லுநர், தியேட்டர் டெக்னீசியன், எலும்பியல் தொழில்நுட்ப வல்லுநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பி.எஸ்.சி.(எம்.எல்.டி.,) பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 10, 12ம் வகுப்பு ,அதற்கு சமமான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெரிட் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங் அழைக்கப்படுவார்கள். இதற்கு ஜூலை 7 மாலை 5:00மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnmedicalselection.org இணையத்தளத்தை பார்வையிடலாம்.