/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம் ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம்
ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம்
ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம்
ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம்

விளைநிலங்களில் புகும் நீர்
நல்லுசாமி, விவசாயி: சின்ன குளத்தில் முளைத்துள்ள ஆகாயத்தாமரைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும். மறுகால் செல்லும் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும். பைபாஸ் ரோட்டில் இந்த வாய்க்கால் செல்லும் பாலம் சிறிதாக இருப்பதால் தண்ணீர் தேங்கி விளைநிலங்களுக்கு சென்று விடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
கோரியும் பலன் இல்லை
ராஜேந்திரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு சங்க செயலாளர்: சின்னகுளத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கரைகளில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் சில இடங்களில் சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். குளம் மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளத்தில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.