ADDED : ஜூன் 22, 2025 12:28 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் துாய்மை பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
குப்பை அதிகம் சேரும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பிள்ளையார்பாளையம், ஜோசப் காலனி, விவேகானந்தர் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, கோபால் நகர் உட்பட 51 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆர்.எம்.காலனியில் ரூ.9.63 கோடி குடிநீர் தொட்டி பணியை பார்வையிட்டதுடன், பூங்காவை மேம்படுத்தவும், எம்.வி.எம். கல்லூரி அருகில் ரவுண்டானா அமைக்கவும் ஆய்வு நடத்தினார்.
கமிஷனர் செந்தில்முருகன், ஆர்.டி.ஓ., சக்திவேல் உடனிருந்தனர்.